உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஒரு மிகப்பெரிய விபத்து நேர்ந்துள்ளது. பபேரு பகுதியில் உள்ள ஒரு மூன்று மாடி கட்டிடத்தை பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அந்த மொத்த கட்டிடமும் பொக்லைன் இயந்திரத்தின் மீதே சரிந்து விழுந்தது. இந்த விபத்தின் போது ஏற்பட்ட பயங்கர சத்தத்தாலும், தூசியாலும் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. நல்லவேளையாக, கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன்பே அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இடிபாடுகளுக்குள் சிக்கிய பொக்லைன் டிரைவரைப் போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
यूपी के बांदा में अतिक्रमण हटाओ अभियान के दौरान बुलडोजर पर भरभरा कर गिर पड़ी बिल्डिंग
हादसे में बुलडोजर चालक घायल, इलाज के लिए अस्पताल में कराया भर्ती. घटना का लाइव वीडियो वायरल pic.twitter.com/8zUAHOWbTs
— Priya singh (@priyarajputlive) February 7, 2026
இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களோ அல்லது அவசர மருத்துவ வசதிகளோ இன்றி அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும், சிலரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு விதிகளை மீறிச் செயல்படுவதாகவும் பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர். இருப்பினும், அந்தத் தாலுகா அதிகாரி (SDM) கூறுகையில், அந்தக் கட்டிடம் ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்ததாகவும், அது தானாகவே சரிந்து விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
