அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க இளம் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மைதானத்திலேயே ஆவேசமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டத்தின் 15-வது ஓவரில் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க ஸ்டப்ஸ் ஓடிவந்தபோது, எதிர்பாராத விதமாக ‘ஸ்பைடர் கேமரா’ அவரது பார்வைக்கு இடையூறாக குறுக்கே வந்துள்ளது. இதனால் கடும் விரக்தியடைந்த ஸ்டப்ஸ், அந்தத் தடையையும் மீறி அபாரமாக கேட்ச் பிடித்தாலும், ஆத்திரத்தில் கேமராவை நோக்கி கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தது அப்படியே நேரலையில் பதிவானது.

“>

அந்தப் போட்டியில் 188 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 111 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலாகியுள்ள நிலையில், அடுத்ததாக ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகளுடனான போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டிய இக்கட்டான நிலைக்கு ரோஹித் படை தள்ளப்பட்டுள்ளது.