அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 போட்டியில், தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ் தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய பந்துவீச்சை நிலைகுலைய வைத்தார்.
தென்னாப்பிரிக்க அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இக்கட்டான சூழலில் களம் புகுந்த பிரெவிஸ், அனுபவ வீரர் டேவிட் மில்லருடன் இணைந்து 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தார். குறிப்பாக, உலகின் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தியின் ஓவரில் அவர் அடித்த ‘நோ லுக் சிக்ஸர்’ (No-look six) ஒட்டுமொத்த மைதானத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
No look short by Dewald Brevis against Varun Chakaravarthy 👀#INDvsSA #T20WorldCup pic.twitter.com/iZQJudQhB5
— Vishal Yadav (@vmkvy95) February 22, 2026
“>
பந்தை அடிக்கவே இல்லை என்பது போன்ற அலட்சியமான உடல்மொழியுடன் அவர் அடித்த அந்த சிக்ஸர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 45 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றிய பிரெவிஸின் இந்த இன்னிங்ஸ், தென்னாப்பிரிக்கா 187 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்ட முக்கிய காரணமாக அமைந்தது.
