அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 உலகக்கோப்பை மோதலில், இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்ய தென்னாப்பிரிக்க வீரர்கள் மேற்கொண்ட அந்த ‘சாகச’ கேட்ச் ஒட்டுமொத்த மைதானத்தையும் ஸ்தம்பிக்க வைத்தது.
மார்கோ ஜான்சன் வீசிய நக்கிள் பந்தை (Knuckle ball) எதிர்கொள்ள முடியாமல் அபிஷேக் சர்மா தூக்கி அடிக்க, பந்து வானில் உயரப் பறந்தது. அப்போது மிட்-விக்கெட்டில் இருந்து கார்பின் பாஷ் மற்றும் மிட்-ஆனில் இருந்து கேசவ் மகாராஜ் என இரு வீரர்களும் பந்தைப் பிடிக்க ஒரே திசையில் ஓடி வந்தனர்.
View this post on Instagram
“>
ஒருகட்டத்தில் இருவரும் பயங்கரமாக மோதிக்கொண்ட போதிலும், கார்பின் பாஷ் தனது கவனத்தைச் சிதறவிடாமல் பந்தைத் தனது நெஞ்சோடு அணைத்து மிரட்டலான கேட்சை பிடித்தார். இந்த மோதலில் மகாராஜ் லேசான காயமடைந்தாலும், இந்திய ரசிகர்களுக்கு அது ஒரு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. ஏற்கனவே மூன்று போட்டிகளில் ‘டக்-அவுட்’ ஆகி பார்ம் அவுட்டில் இருந்த அபிஷேக் சர்மா, இந்தப் போட்டியிலும் 15 ரன்களுக்கு வெளியேறியது இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தியது.
