இதில் தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தி அலுவலக சர்வருடன் இணைக்கப்படும். கணக்கெடுக்க வேண்டிய தேதி மென்பொருளாக பதிவேற்றம் செய்யப்படும். அந்த தேதி வந்தவுடன் தானாகவே மின் பயன்பாடு கணக்கீடு செய்து நுகர்வோரின் மொபைல் போனுக்கு மின்கட்டண விவரத்தை எஸ் எம் எஸ் மூலமாக அனுப்பப்படும்.

அதனால் மொபைல் எண்ணை புதுப்பிக்க விருப்பமுள்ளவர்கள் www.tangedco.org என்ற இணையதள பக்கத்திற்குச் சென்ற பில்லிங் சர்வீஸ் பகுதியில் மொபைல் எண் அப்டேட் பகுதிக்கு சென்று மின் இணைப்பு எண், புதிய மொபைல் எண்ணை பதிவிட்டு ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆதார் எண் என ஏதாவது ஒரு ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிரிவு அலுவலகங்களில் சரிபார்த்து பின்னர் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.