சில ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்திருக்கிறது. இப்பட்டியலில் OnePlus 10R, Xiaomi 12 Pro, Xiaomi 11 Lite NE 5G ஆகிய போன்கள் அடங்கும். இதில் 5000mAh பேட்டரி, 108MP கேமரா ஆகிய பல்வேறு அற்புதமான அம்சங்கள் இருக்கிறது. இ-காமர்ஸ் தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்டு போன்றவை இந்த ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்குகிறது.

Moto G72 ஸ்மார்ட் போனை மிக மலிவான விலையில் வாங்க தற்போது நல்ல வாய்ப்புள்ளது. இந்த போன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த போன் 2 வகைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போனின் அடிப்படை மாறுபாட்டில் (பேஸ் வேரியண்ட்) ரூ.7,000 தள்ளுபடியானது கிடைக்கிறது. இதன் அசல் விலையானது ரூ.21,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 செயலி இருக்கிறது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது.