பிரபல ஸ்மார்ட் போன் பிராண்டான ஒன் பிளஸ் நிறுவனமனது இந்தியாவில் மிக மலிவான விலையில் 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்கு நிறுவனம் ஒன் பிளஸ் நார்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite) என்று பெயரிட்டுள்ளது. அதோடு பிராண்ட் Nord Buds 2 TWS இயர்போன்கள் குறித்த அறிவிப்பையும் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

இதில் சக்தி வாய்ந்த அம்சங்கள் இருக்கிறது. அத்துடன் அதன் நிறம் மற்றும் வடிவமைப்பு மிகவும் தனித்துவமானதாக உள்ளது. இதன் விலையானது முறையே ரூ.19,999 மற்றும் ரூ.21,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பிராண்டின் இணையதளமான OnePlus Experience Stores மற்றும் அமேசான் போன்றவற்றில் ஏப்ரல் 11 முதல் விற்பனைக்கு (ஓப்பன் சேல்) கிடைக்கும். ICICI வங்கி வாடிக்கையாளர்கள் Nord CE 3 Lite ஐ வாங்கினால் ரூபாய்.1,000 உடனடி தள்ளுபடியை பெறலாம்.