இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பலரது தொலைபேசிக்கும் அடிக்கடி ஸ்பேம் கால்கள் வருகின்றன. தவிர்க்க அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் DND விருப்பத்தை வைத்துள்ளன.

தேவையற்ற சந்தைப்படுத்துதல் அழைப்புகள் மற்றும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் தடுக்க பயனர்கள் இந்த சேவையில் பதிவு செய்யலாம். இதற்கு முதலில் மொபைலில் மெசேஜ் பாக்ஸ் க்கு சென்று 1909 என்ற எண்ணுக்கு ஸ்பேம் அழைப்புகளை தடுக்க மெசேஜ் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் மேற்கண்ட எண்ணுக்கு டோல் ஃப்ரீ எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம்.