தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகக் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ‘அம்மா ரோந்து வாகனங்கள்’ அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது இந்த வாகனங்களுக்குத் திமுக மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆகிய கட்சிகள் தங்களின் பெயர்களை மாற்றிப் புதிய ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளதாகக் கூறி, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் ஐடி விங் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இதைக் கிண்டல் செய்யும் விதமாக, “ஸ்டிக்கருக்கே ஸ்டிக்கர்…. ஆனா அதுக்கும் திறப்பு விழா ரத்து…. என்னவா இருக்கும்?” என்ற வாசகங்களுடன், பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள ரோந்து வாகனங்களின் புகைப்படத்தையும் அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
<a href=”http://
ஸ்டிக்கருக்கே ஸ்டிக்கர்….
ஆனா அதுக்கும் திறப்பு விழா ரத்து….
என்னவா இருக்கும்? @CMOTamilNadu #பொய்க்கால்_குதிரை_அரசு pic.twitter.com/WuXsQeZmTc
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) May 29, 2026
“>
முந்தைய அரசின் திட்டங்களுக்குப் புதிய ஸ்டிக்கர் ஒட்டி, தங்களின் திட்டங்கள் போலக் காட்டி விளம்பரம் தேடப் பார்க்கிறார்கள் என்ற தொனியில் அதிமுகவினர் வெளியிட்டுள்ள இந்த அரசியல் கலாய் பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
