தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பொது இடங்களில் மது பாட்டில்கள் வீசப்படுவதைத் தவிர்க்கவும், காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் இன்று (ஜனவரி 6) முதல் சென்னையில் அமலுக்கு வருகிறது. இதன்படி, மது வாங்கும் போது கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டும். காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கும்போது அந்த 10 ரூபாயை வாடிக்கையாளர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

​ஏற்கனவே நீலகிரி, கோவை போன்ற மாவட்டங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், தற்போது சென்னையிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.