திருமணமாகி ஓரே ஒரு வருடத்திற்குள் விவாகரத்துக் கோரிய மனைவியின் விவகாரத்தில், அவர் கோரிய ஜீவனாம்சத் தொகை அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. கணவர் ₹40 லட்சம் கொடுக்க முன்வந்த நிலையில், மனைவி அதற்கும் அதிகமாக ₹5 கோடி ஜீவனாம்சம் வேண்டும் எனக் கோரியுள்ளார். மனைவியின் இந்தக் கோரிக்கையைச் செவிமடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.

நீதிபதிகள், இது முறையான கோரிக்கை அல்ல என்று கூறி, அதிக ஆசை கூடாது என மனைவியைத் தீவிரமாக எச்சரித்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம், ஜீவனாம்சம் பெறும் நோக்கிலேயே திருமணம் நடந்ததா என்ற சந்தேகத்தையும் விவாதத்தையும் பொதுவெளியில் எழுப்பியுள்ளது. இது போன்ற வழக்குகள் திருமண பந்தத்தின் புனிதத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.