ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் ஜுரம் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், மைதானத்தில் ரீல்ஸ் எடுக்க ஆசைப்பட்ட பெண் ஒருவருக்குப் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஸ்டேடியத்தில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த அந்தப் பெண், ஒரு கட்டத்தில் தனது கையில் அணிந்திருந்த சுமார் 70,000 ரூபாய் மதிப்புள்ள தங்க மோதிரத்தைக் கழற்றித் தரையில் வீசியுள்ளார். ஆனால், தரையில் பட்ட அந்த மோதிரம் எதிர்பாராத விதமாகத் தெறித்துத் தூரமான ஓரிடத்தில் விழுந்து காணாமல் போனது.

​தனது விலை உயர்ந்த மோதிரத்தைத் தொலைத்த அந்தப் பெண், நீண்ட நேரமாகத் தரையில் அமர்ந்து தேடியும் அது கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. ஒரு சிறு வீடியோவுக்காக மதிப்புள்ள நகையைத் துணிச்சலாக வீசி எறிந்ததும், பின்னர் அதைத் தேடித் தவித்ததும் தொடர்பான காட்சிகள் தற்போது இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. தேவையற்ற இந்த முயற்சியால் தனது உழைப்பில் வாங்கிய நகையைப் பறிகொடுத்த பெண்ணின் நிலை குறித்துப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.