தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் தற்போது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக கோவை தெற்கு தொகுதியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர், மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிவதற்காக ஒரு ரோபோட்டை தன்னுடன் வாக்கு சேகரிக்க அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த ரோபோட்டின் தோளில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சித் துண்டு அணிவிக்கப்பட்டிருந்தது பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை அரசியலில் புகுத்திய இந்த நூதன முயற்சி தற்போது இணையதளங்களில், குறிப்பாக எக்ஸ் (X) தளத்தில் தீயாய் பரவி வருகிறது.
