அதிகாரத் திமிரும், அலட்சியமும் ஒரு அப்பாவித் தொழிலாளியின் உயிரைப் பறித்துள்ள சம்பவம் அலிகாரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சிஎம் கிரிட் திட்டத்தின்’ கீழ் சீவர் லைன் சீரமைப்புப் பணியின் போது, 14 அடி ஆழ பள்ளத்தில் வேலை பார்த்த மகேந்திரா என்ற 32 வயது இளைஞர் மண் சரிந்து உயிரிழந்தார். இது விபத்து என்பதைத் தாண்டி, ஒரு அதிகாரியின் அராஜகப் போக்கினால் நடந்த படுகொலை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மகேந்திராவின் அண்ணன் ராஜ்குமார் அளித்த வாக்குமூலம் நெஞ்சை உலுக்குகிறது. “மண் சரிந்து கொண்டே இருக்கிறது, வேலை செய்ய வேண்டாம் என்று ஜே.இ நரேந்திர சிங்கிடம் கெஞ்சினேன். ஆனால் அவர் ‘வேலை செய்யாமல் சோம்பேறித்தனம் காட்டுகிறாய்’ என்று கூறி என் தம்பியை எட்டி உதைத்து பள்ளத்திற்குள் தள்ளினார்” என்று அவர் கதறுகிறார்.
डरावनी वीडियो है
कब किसकी मौत आ जाए कोई नहीं जानता है, अब इस खबर को ही देख लीजिए
यूपी के अलीगढ़ में पाइप लाइन का काम चल रहा था. मजदूर गड्ढे में उतर कर काम कर रहा था।
तभी अचानक मिट्टी का एक हिस्सी टूटकर मजदूर पर जा गिरा जिसके बाद मजदूर की मौत हो गई। pic.twitter.com/dwVregODHs
— Priya singh (@priyarajputlive) April 25, 2026
சம்பவ இடத்திலேயே மகேந்திரா மண்ணுக்குள் புதைந்து பலியான நிலையில், அந்த அதிகாரி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தற்போது நகராட்சி நிர்வாகம் 5 லட்சம் நிதியுதவி அறிவித்து, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், “உயிருக்குக் காசு கொடுத்தால் போன உயிர் வருமா?” என்று உறவினர்கள் எழுப்பும் கேள்வி ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்குகிறது.
