ஐபிஎல் (IPL) களத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் ஜாம்பவான் பவுலர்களை எல்லாம் ‘குழந்தை’ போல டீல் செய்து வருவது கிரிக்கெட் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். வெறும் 36 பந்துகளில் சதமடித்து, ஐபிஎல் வரலாற்றிலேயே 3-வது அதிவேக சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். பிரகுல் ஹிங்கேயின் ஒரே ஓவரில் 4 அசுர சிக்ஸர்களை பறக்கவிட்டு, 15 பந்துகளிலேயே அரைசதம் கடந்து மிரட்டியுள்ளார்.

​சதமடித்த பிறகு வைபவ் செய்த கொண்டாட்டம் தான் இப்போது சமூக வலைதளங்களில் ‘டாப் ட்ரெண்டிங்’. வழக்கமாக பேட்டை உயர்த்தி காட்டும் வைபவ், இந்த முறை பேட்டையும் கிளவுஸையும் கீழே வைத்துவிட்டு, கைகளால் ‘ஹார்டின்’ சிம்பள் காட்டி சல்யூட் அடித்துள்ளார். இவரது இந்த அதிரடியால் ராஜஸ்தான் அணி 228 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது. துருவ் ஜூரல் மற்றும் வைபவ்வின் அதிரடி கூட்டணியைப் பார்த்து ஹைதராபாத் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.