மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி ஒரு ஆணின் சடலம் மீட்க்கப்பட்டது. போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சந்திரசேகர் என்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக அவரது மனைவி ரஞ்சனாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. அதாவது ரஞ்சனா ஷாருக் என்ற வாலிபருடன் கள்ளக்காதலில் இருந்த நிலையில் கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் வாலிபரை வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

இது சந்திரசேகருக்கு தெரிய வந்ததால் அவர் தன் மனைவியிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இதன் காரணமாக ரஞ்சனா தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி சம்பவ நாளில் ஷாருக் தன்னுடைய கூட்டாளியான மைனுதீன் என்பவருடன் வீட்டிற்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த சந்திரசேகரை கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் தற்போது ரஞ்சனா மற்றும் மைனுதீன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஷாருக்கை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.