கர்நாடக மாநிலத்தில் உள்ள கர்வார் பகுதியில் கீரப்பா (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பண்டா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்து வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு கீரப்பா வீட்டிற்கு சென்ற நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் நீண்ட நேரம் ஆக நேற்று காலை பணிக்கு வராததால் சக போலீசார் அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது அறையில் தூக்கில் தொங்கி நிலையில் பிணமாக மீட்க்கப்பட்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவருடைய சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் குடும்ப பிரச்சினை மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல காரணங்களால் அவர் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
