ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து ஹைதராபாத்துக்கு நேற்று இரவு இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த விமானிகள் அவசரமாக விமானத்தை தரையிறக்கினர். திருப்பதி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு முன்பாக சுமார் 30 நிமிடங்கள் வானில் வட்டமடித்தது. விமானம் தரையிறக்கப்பட்டதும் பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு பத்திரமாக அழைத்து செல்லப்பட்டனர்.
இதில் யாருக்கும் எந்தவித காயமோ அல்லது எந்தவிதமான பிரச்சனையோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீப காலமாக விமான தொழில்நுட்ப கோளாறுகள் குறித்த செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
