திருமண விழா என்பது வாழ்க்கையில் ஒருமுறை வரும் சிறப்பான தருணம். ஆனால், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், அந்த மகிழ்ச்சி தருணம் எதிர்பாராத அதிர்ச்சியாக மாறியது. வீடியோவில், மணமகள் தனது மணமகனை மேடைக்கு அழைத்து நடனமாடத் தொடங்குகிறார்.
ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சத்துடன் இருந்த மணமகன், பின்னர் புன்னகையுடன் இணைந்து நடனமாடத் தொடங்கினார். ஆனால், சில நொடிகளிலேயே அவர் திடீரென ஆக்ரோஷமாக மாறி, மணமகளின் கையைப் பிடித்து சல்சா பாணியில் வேகமாகச் சுழற்றி, பலமாகத் தள்ளினார். சமநிலையை இழந்த மணமகள் மேடையில் மோசமான நிலையில் விழுந்தார்.
இந்த சம்பவம் நடக்கும் போதும், மணமகன் தனது நடனத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது, அங்கு இருந்த விருந்தினர்களை அதிர்ச்சியடையச் செய்தது. மணமகளின் நிலையை கவனித்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உடனே மேடைக்கு வந்து மணமகனைத் தடுத்து, மணமகளுக்கு உதவினர். இந்த சம்பவம் முழுவதும் வீடியோவில் பதிவாகி, தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது.
View this post on Instagram
“>
இன்ஸ்டாகிராமில் hasya_verse என்ற கணக்கில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது. கருத்துப் பிரிவில் பலர் மணமகனின் நடத்தை மீது கடும் விமர்சனம் எழுப்பியுள்ளனர். “மணமகன் எல்லா வரம்புகளையும் மீறிவிட்டார்” என்று ஒருவர் குறிப்பிட, “இது ஸ்கிரிப்ட் செய்யப்பட்டதாக இருக்கலாம், ஆனால் உண்மையாக நடந்தது என்றால், மிகுந்த வருத்தம்” என்று மற்றொருவர் பதிவிட்டார். மேலும், “இப்போது இவர்களின் நிலை இப்படியிருக்கிறது என்றால், எதிர்காலத்தில் என்ன நடக்கும்?” என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
