சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்களை ஒருபுறம் அதிர்ச்சியிலும் மறுபுறம் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. குடிபோதையில் இருந்த ஒரு நபர் சாலையின் நடுவில் நின்று, முழு வேகத்தில் வந்த டிராக்டரின் முன் சாகசம் செய்யத் தொடங்கினார்.
வீடியோவில், அந்த நபர் டிராக்டரின் முன் உறுதியாக நின்றபடி, பின்னர் அதன் கீழே ஊர்ந்து செல்ல முயற்சிப்பது தெளிவாகக் காணப்படுகிறது. டிராக்டர் ஓட்டுநர் ஹார்ன் அடித்தும், ‘சிங்கம் எதுக்கும் அஞ்சாது ’ மோடில் இருந்த அந்த நபர் அசையாமல் நின்றது காட்சியில் தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக, எந்தவித விபத்தும் ஏற்படாமல் அவர் பத்திரமாக விலகினார்.
இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @studentgyaan என்ற கணக்கில் பகிரப்பட்டதும், X-ல் மீம்ஸ்கள் வெள்ளமாகின. ஒருவர், “இந்த சகோதரர் டிராக்டரை ஸ்டண்ட் ப்ராப் என்று தவறாகப் புரிந்துகொண்டார்!” என்று கலாய்த்தார். மற்றொருவர், “டிராக்டர் டிரைவருக்கு சல்யூட்… ரிமோட் பேட்டரிகளைத் தேடும் போது கூட எனக்கு இவ்வளவு பொறுமை இல்லை” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். சிலர் இதற்கு ‘தேசி டேர்டெவில்’ என தலைப்பு கொடுத்து, “இந்த டேர்டெவில்லுக்கும், விபத்தை தவிர்த்த டிராக்டர் டிரைவருக்கும் சல்யூட்” என்று பாராட்டினர்.
View this post on Instagram
“>
இதே நேரத்தில், சிலர் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர். “சிரிப்பில் எந்த விபத்தும் இருக்கக்கூடாது… இப்படிப்பட்ட ஆபத்தான சாகசங்களை யாரும் செய்யக் கூடாது” என்று எச்சரித்தனர். மொத்தத்தில், எந்த உயிரிழப்பும் இல்லாமல் முடிந்த இந்த சம்பவம், இணையத்தில் வைரல் வீடியோவாக பரவிக் கொண்டு வருகிறது
