மத்தியப் பிரதேசம் ஷாஹ்தோல் மாவட்டம் கோபாரு–ஜெய்த்பூர் சாலையில், வாகனம் மோதியதில் கரடி குட்டி கடுமையாக காயமடைந்தது. இதனால், தாய் கரடி பீதியுடன் தனது காயமடைந்த குட்டியை முதுகில் சுமந்து சாலையோரத்திற்கு நகர்த்தும் மனதை உருக்கும் காட்சி, சமூக ஊடகங்களில் பரவி, நெட்டிசன்களை கண்கலங்கச் செய்துள்ளது.

சம்பவம் நடந்ததும், தாய் கரடி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் குட்டியின் அருகே இருந்து அதனை காப்பாற்ற போராடியது. இன்னொரு குட்டி தனது முதுகில் ஒட்டிக்கொண்டிருந்த நிலையில், காயமடைந்த குட்டியை வாகனங்கள் வரும் ஆபத்திலிருந்து பாதுகாக்க சாலையோரத்திற்கு இழுத்துச் சென்றது. இருப்பினும், குட்டி அசைய முடியாமல் அரைமயக்கத்தில் கிடந்தது. காயத்தின் தீவிரத்தால், இறுதியில் குட்டி உயிரிழந்தது.

 

View this post on Instagram

 

A post shared by The Times of India (@timesofindia)

“>

பின்னர், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, தாய் கரடியையும் உயிர் பிழைத்த குட்டியையும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். இந்த சம்பவம், வனப்பகுதிகளில் வேகமாக வாகனம் ஓட்டுவதால் விலங்குகள் சந்திக்கும் அபாயங்களை மீண்டும் நினைவூட்டியுள்ளது.

நெட்டிசன்கள், “வனவிலங்குகளும் தங்கள் குட்டிகளுக்கு மனிதர்களைப் போலவே அன்பு செலுத்துகின்றன” என்று பதிவிட்டு, வாகன ஓட்டிகள் வனப்பகுதிகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.