ரயிலில் இருந்து இறங்கி ரயில் நிலைய நடை மேடையில் ரீல் எடுத்து கொண்டிருந்த ஒரு பெண், திடீரென அங்கிருந்த ஒரு ஆணால் தள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இது ரீல் எடுக்க வேண்டிய இடமா?” என்று கூறிய அந்த ஆண், கோபத்தில் பெண்ணை தள்ளியதாக வீடியோவில் தெரிகிறது. அதிர்ச்சியடைந்த பெண், “உனக்குப் பைத்தியமா? ஏன் தள்ளினாய்?” என்று கேட்டு, “இதற்காக போலீசில் புகார் அளிப்பேன்” என எச்சரிக்கிறார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்து, அங்கு கூட்டம் திரள்கிறது. அருகிலிருந்த சிலர் சமரசப்படுத்த முயன்றும், யாரும் உடனடியாக ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் ரயிலில் இருந்து இறங்கிய மற்றொரு பெண் தலையிட்டு, “தள்ளுவது தவறு, மரியாதையுடன் பேசலாம்” என்று கூறி சூழ்நிலையை சமாதானப்படுத்தினார். இறுதியில், தனது தவறை உணர்ந்த அந்த ஆண், பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார்.

“>

 

இந்த வீடியோ X தளத்தில் @yati_Official1 என்ற கணக்கில் இருந்து பகிரப்பட்டு, இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. “மாமாவின் தைரியத்திற்கு வணக்கம்” என சிலர் பாராட்ட, “தள்ளுவதற்குப் பதிலாக நிதானமாகப் பேசலாம்” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.