பீகார் மாநிலம் முசாபர்பூரில் அத்தை–மருமகன் காதல் சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போச்சாஹான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் வசிக்கும் நாவல் கிஷோர் மற்றும் குஷ்பு தேவி தம்பதியினரின் வாழ்க்கை சீராகச் சென்றுகொண்டிருந்தது. ஆனால் அடிக்கடி வீடு வந்து சென்ற மருமகன் நீரஜுடன், குஷ்பு தேவிக்கு காதல் ஏற்பட்டது. கணவர் இல்லாத நேரங்களில் அவர் மருமகனை வீட்டிற்கு அழைத்து வந்ததாக குற்றச்சாட்டு. இறுதியில், கணவரை தாக்கி கைகளை உடைத்த அவர், 13 வயது மகனுடன் மருமகனுடன் தப்பிச் சென்றார்.
பாதிக்கப்பட்ட கணவர் காவல்துறையில் அளித்த புகாரில், “கர்ஹான் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் என் மருமகன் அடிக்கடி வீட்டிற்கு வருவார். இதற்கிடையில், அவர் என் மனைவியுடன் தொடர்பு கொண்டார். நான் எதிர்த்தபோது, இருவரும் சேர்ந்து என்னை அடித்து உதைத்தனர். என் மகனும் எதிர்த்தார், ஆனால் கேட்காமல், என் மனைவி என் 13 வயது மகனுடன் மருமகனுடன் ஓடிவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், குஷ்பு தேவி தப்பிச் செல்லும் முன் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், லட்சக்கணக்கான நகைகள், நில ஆவணங்கள் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றதாக கூறப்பட்டுள்ளது. சம்பவத்தை தடுக்க முயன்றபோது, நீரஜ் மற்றும் குஷ்பு இணைந்து தாக்கி கைகளை உடைத்ததாகவும், “இதை யாரிடமும் சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று குஷ்பு மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.எச்.ஓ ராகேஷ் குமார் யாதவ் தெரிவித்தார். “விசாரணை நடைபெற்று வருகிறது. இருவரையும் விரைவில் கைது செய்வோம்” என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இந்த அத்தை–மருமகன் காதல் சம்பவம், கிராமத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
