தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் படித்து, தற்போது சுவீடனில் உள்ள உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றான கே.டி.எச் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம் பெற்றுள்ள மாணவர் ஒருவர் தனது சாதனை குறித்து எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், “எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று சுவீடனில் எம்.எஸ் பட்டம் பெற்றிருக்கிறேன்; இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்” என்று பதிவிட்டு முதலமைச்சரைக் டேக் செய்திருந்தார். இந்த எக்ஸ் பதிவு சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகப் பரவி வந்தது.

<a href=”http://

“>

இம்மாணவனின் பதிவிற்குப் பதில் அளித்துள்ள திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்” என்று பெருந்தன்மையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், “உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு கைடாக இருந்து வழிகாட்டுனீங்கனாஅதுதான் எனக்கு மகிழ்ச்சி; நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!” என இம்மாணவனை மனதார வாழ்த்திப் பாராட்டியுள்ளார்.

கடின உழைப்பால் உலக அளவில் சாதித்த கிராமப்புற மாணவனின் பாசத்திற்கும், அதற்குத் தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள முதிர்ச்சியான பதிலுக்கும் நெட்டிசன்கள் தங்களின் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.