இன்றைய டிஜிட்டல் உலகில் ‘லைக்குகளுக்காகவும்’ ‘வியூஸ்களுக்காகவும்’ மனிதர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு ஒரு அதிர்ச்சியான உதாரணம் இந்தச் சம்பவம். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இரண்டு இளம்பெண்கள் ஒரு கேப் டிரைவரிடம் வாடகையில் 100 ரூபாய் தள்ளுபடி பெறுவதற்காக, அதற்குப் பதிலாக அவருக்கு ‘இலவச பொழுதுபோக்கு’ (எண்டர்டெயின்மெண்ட்) தருவதாகப் பேரம் பேசுகின்றனர்.
குந்தன் படேல் என்பவர் பகிர்ந்த இந்த வீடியோவில், பணத்தைக் குறைப்பதற்காக அந்தப் பெண்கள் டிரைவரிடம் விவாதம் செய்வதும், பிறகு இப்படியொரு விசித்திரமான சலுகையை முன்வைப்பதும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.இந்த வீடியோ பரவியதுமே இணையவாசிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஓட்டுநரை கேலிப் பொருளாக்குவதும், வெறும் ரீல்ஸ் எடுத்து வைரலாவதற்காக மற்றவர்களின் கண்ணியத்தைப் புண்படுத்துவதும் மிக மோசமான செயல் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
A video circulating on social media shows girls allegedly offering “free entertainment” to a cab driver in exchange for a ₹100 discount on the fare. The clip, originally shared by Kundan Patel, has triggered widespread debate about boundaries, consent, exploitation, and the… pic.twitter.com/SAwlH4WLBZ
— ShoneeKapoor (@ShoneeKapoor) January 27, 2026
ஒருவேளை இதே செயலை ஒரு ஆண், பெண் ஓட்டுநரிடம் செய்திருந்தால் இந்நேரம் சட்ட ரீதியான நடவடிக்கை பாய்ந்திருக்கும் என்றும், சமூக வலைதளங்களில் ‘ப்ராங்க்’ என்ற பெயரில் இது போன்ற அருவருப்பான காரியங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
