சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அந்தப் பெண் அதிரடிப் புகார்களை அடுக்கினார்:

கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பாதி பேருக்கு மேல் (50%) திருமணத்தைத் தாண்டிய ரகசிய உறவுகளில் இருப்பதாக அந்தப் பெண் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

“ஆண், பெண் இருவருமே குழந்தை பெற்றுக்கொள்ளவும், வயதான பெற்றோரைப் பார்த்துக்கொள்ளவும் மட்டுமே திருமணம் செய்கிறார்கள்.

குழந்தை வேண்டுமென்றால் தத்தெடுக்கலாம், பெற்றோரைப் பார்க்க வேலையாட்களை வைக்கலாம். இதற்கெல்லாம் மாற்று இருக்கும்போது கல்யாணம் எதற்கு?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தப் பெண்ணின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையமே இரண்டாகப் பிரிந்துள்ளது. “திருமணம் என்பது வெறும் தேவைக்கானது அல்ல; அது அன்பு மற்றும் துணையைப் பற்றியது.

கார்ப்பரேட் ஊழியர்களை இப்படி ஒட்டுமொத்தமாகத் தவறாகச் சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது” எனப் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.

“இன்றைய அவசர உலகில் நகரங்களில் நடக்கும் கசப்பான உண்மையைத்தான் அவர் பேசியிருக்கிறார்” என மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.