இந்தியாவில் தற்போது சாதாரண ஏழை எளிய மக்கள் முதல் அனைவருமே அதிக அளவு முதலீடு திட்டங்களில் சேமிக்க விரும்புகின்றன. இந்தியாவில் நிறைய முதலீட்டு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டம் மிகவும் பிரபலமான ஒரு சேமிப்பு திட்டமாகும். பாதுகாப்பு மற்றும் நிதி வளர்ச்சியை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த சேமிப்பு திட்டம் சிறந்தது. இந்த திட்டத்தின் முதலீட்டு காலம் குறைந்தது 15 ஆண்டுகள் ஆகும். இது ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் மேலும் நீட்டிக்கப்படலாம்.

இந்தத் திட்டத்தில் கணக்கை திறக்க குறைந்தபட்சம் 500 ரூபாய் இருந்தால் போதும். ஒரு நிதியாண்டில் இதன் அதிகபட்ச வருடாந்திர வைப்பு வரம்பு 1.5 லட்சம் ரூபாய் ஆகும். எந்த ஒரு இந்திய குடிமகனும் இந்த திட்டத்தின் கீழ் கணக்கை திறக்கலாம். பெற்றோர்கள் தங்கள் மைனர் குழந்தைகளுக்காகவும் இந்த கணக்கை திறக்கலாம். இந்த கணக்கை திறக்க அடையாளச் சான்று, முகவரி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும். இதில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளிலும் கணக்கை திறக்கும் வசதி உள்ளது. குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீட்டில் இந்த கணக்கை நீங்கள் திறந்து அதிக அளவிலான வருமானம் ஈட்டலாம். குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெற விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.