சத்தீஸ்கர் மாநிலம் கபிரிதாம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள்ளேயே மது அருந்தும் அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கபிரிதாம் மாவட்டம் பண்டாரியா தொகுதியில் உள்ள தெலியாபானி லேட்ரா கிராமத்துப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
வகுப்பறையில் மது பாட்டில்கள் மற்றும் அதற்கான தின்பண்டங்களுடன் ஆசிரியர் அமர்ந்து மது அருந்தும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. மாணவர்களுக்குக் கல்வியையும் நல்லொழுக்கத்தையும் புகட்ட வேண்டிய ஆசிரியரே, கல்வி கற்கும் இடத்தைப் மது அருந்தும் இடமாக மாற்றியது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பார்த்த பலரும், அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
स्कूल खुलते ही रुझान आना शुरू हो गया, स्कूल के अंदर देखिए कैसे पैग बना रहा है शिक्षक.
छत्तीसगढ़ के ज्यादातर स्कूल में यही स्थिति है. कबीरधाम के पंडरिया ब्लॉक के ग्राम तेलियापानी लेदरा का मामला.#Kawardha #Kabirdham #Chhattisgarh pic.twitter.com/KZ2z0lNuDi
— 𝐒𝐮𝐫𝐲𝐚 𝐏𝐫𝐚𝐤𝐚𝐬𝐡 𝐒𝐮𝐫𝐲𝐚𝐤𝐚𝐧𝐭 (@SPsuryakant) June 26, 2026
“>
ஒரு ஆசிரியர் தனது பொறுப்பை உணராமல் பள்ளியின் புனிதத்தைக் கெடுத்த இந்தச் செயல், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் இருப்பதால், அந்த ஆசிரியர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
