துருக்கி நாட்டில் ராணுவ வீரர்களுக்கு தேவைப்படும் ஆயுதங்களுக்கான வெடி மருந்தை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் 50க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இந்த வெடி மருந்து தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
