சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் பலரும் வெவ்வேறு விதமாக ரீல்ஸ் எடுப்பார்கள். சிலர் அதிக லைக்குகளுக்காக ஆபத்தான செயல்களைச் செய்து காணொளிகள் எடுக்கின்றனர். அப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகி, வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியில், ஒரு நபர் தண்டவாளத்தைத் தாண்டி தைரியமாக டைவ் அடித்து குதிக்கிறார். அவர் தண்டவாளத்தைத் தாண்டிய அடுத்த நொடியில், ஒரு ரயில் வேகமாக அந்தத் தண்டவாளத்தில் செல்கிறது.
ஒரு நொடி தாமதித்திருந்தாலும், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். இந்தப் பதறவைக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
