மகாராஷ்டிர மாநில போக்குவரத்து கழகத்தின் அடையாளமான ‘லால்பரி’ என்று அழைக்கப்படும் சிவப்பு நிறப் பேருந்தின் மிகத் துல்லியமான சிறிய அளவிலான மாதிரி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் காரத் பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மகனான சூரஜ் மானே என்பவர், எவ்வித முறையான பயிற்சியும் இன்றி தனது அபார திறமையால் இந்த பேருந்தை தத்ரூபமாக உருவாக்கியுள்ளார்.
மேலும் பேருந்தின் கதவுகள், ஜன்னல்கள், படிக்கட்டுகள் மற்றும் டயர்கள் என ஒவ்வொரு சிறிய பகுதியையும் அவர் செதுக்கியுள்ள விதம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரபல வாகன ஆர்வலர் அடில் ஜல் தாருகானாவாலா இந்தப் பேருந்தின் நுணுக்கங்களைப் பாராட்டி பகிர்ந்த வீடியோ, இந்த இளைஞரின் கைவண்ணத்தை உலகறியச் செய்துள்ளது.
View this post on Instagram
“>
சூரஜ் மானே தனது தந்தையின் உதவியுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டயர்களைப் பயன்படுத்தி இந்தப் பேருந்தை உருவாக்கியுள்ளார். இவரது திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமாக, தற்போது இவரிடம் வாகனங்களைச் செய்து தரக்கோரி ஏராளமான ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. எந்த அளவுக்கு என்றால், 2027-ஆம் ஆண்டின் முதல் கால்பகுதி வரை இவரிடம் புதிய ஆர்டர்களை எடுக்க முடியாத அளவிற்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கிராமப்புற இந்தியாவில் ஒளிந்திருக்கும் இது போன்ற அபூர்வ கலைஞர்களின் திறமைக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவரது இந்த ‘லால்பரி’ மினி பேருந்து, கடின உழைப்பும் ஆர்வமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
