இந்தியாவில் வயதான விவசாயிகளுக்காக மத்திய அரசு கிஷான் மந்தன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் மாதந்தோறும் 55 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை செலுத்த வேண்டும். 60 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு விவசாயிகளின் வங்கி கணக்கில் மாதம்தோறும் 3 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும்.

விவசாயி இறந்து விட்டால் அவருடைய மனைவிக்கு ஓய்வூதிய தொகையில் பாதி கிடைக்கும். ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண் போன்ற விவரங்களுடன் உங்களுடைய சேவா கேந்திராக்கள் மூலம் விவசாயிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.