தலைநகர் டெல்லி நேரு பிலேஸ் பகுதியில் உள்ள சர்மாஜியின் கடையில் தஹி பல்லா சாப்பிடாமல் யாருமே போக மாட்டார்கள். இவருடைய கடையில் உள்ள தஹி பல்லா தனி சுவை கொண்டது. தஹி பல்லா என்றால் உளுந்து வடை. அதோடு தயிர் மற்றும் சட்னி சேர்த்து பரிமாறப்படும் ஒரு உணவு. 1989 ஆம் வருடம் முகேஷ் குமார் சர்மா என்பவர் முதன்முறையாக நேரு பிளேஸ் பகுதியில் இதனை விற்பனை செய்தார்.

அப்போது இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தயிர் வடை தற்பொழுது 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவர் இதற்காக கடையை வாடகைக்கு எடுக்காமல் ஒரு BMW காரில்  மேசைகளை கொண்டு வருகிறார். பின்னர் அதனை வழக்கமாக இருக்கும் இடத்தில் போட்டு விற்பனை செய்கிறார். பின்பு விற்பனை முடிந்ததும் அதனை காரிலேயே எடுத்து வைத்து வீடு திரும்புகிறார். இவருடைய கடின உழைப்பால் தற்போது கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Neeraj Koli || Delhi (@bhookhasher1)