பொழுதுபோக்கு பூங்காக்களுக்குச் செல்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டாலும், இந்த ராட்சத ராட்டினங்கள் மற்றும் ரோலர் கோஸ்டர்களில் ஏற்படும் ஒரு சிறிய இயந்திரக் கோளாறு அல்லது தொழில்நுட்பக் குறைபாடு கூட அப்பாவி உயிர்களைப் பறிக்கும் கொடிய விபத்தாக மாறிவிடுகிறது.

மேலும் ‘டெத் ட்ராப்’ என்று அழைக்கப்படும் இந்த சவாரிகள், நொடிப்பொழுதில் மகிழ்ச்சியை மரணமாக மாற்றும் வல்லமை கொண்டவை. குறிப்பாக முறையான பராமரிப்பு இல்லாதது மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாததே இதுபோன்ற கோர விபத்துக்களுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.

பொழுதுபோக்கு பூங்காக்களில் உள்ள இயந்திரங்கள் ஒவ்வொன்றும் மிகவும் சிக்கலான முறையில் கட்டமைக்கப்பட்டவை. இதில் ஒரு சிறிய நட்டு அல்லது போல்ட் தளர்ந்தாலும், ஒட்டுமொத்த சவாரியும் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழும் அபாயம் உள்ளது. மனிதத் தவறுகள் அல்லது மின்னணு கோளாறுகள் ஏற்படும்போது, உயரத்தில் இருக்கும் பயணிகள் தப்பிக்க வழியின்றி சிக்கிக் கொள்கின்றனர்.

எனவே, இதுபோன்ற ஆபத்தான சவாரிகளில் ஏறும் முன்பாக, அந்த இடத்தின் பாதுகாப்புத் தரத்தை உறுதி செய்வது அவசியம். வெறும் தற்காலிக உற்சாகத்திற்காக உங்கள் உயிரைப் பணையம் வைக்க வேண்டாம் என்றும், அசாத்திய வேகம் கொண்ட சவாரிகளில் அதீத கவனத்துடன் இருக்குமாறும் இந்தத் தொகுப்பு எச்சரிக்கிறது.