சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றில், சமையலறையில் பெண் ஒருவர் உணவு சமைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய பாம்பு கொதிக்கும் பாத்திரத்திற்குள் குதிக்கும் காட்சி பார்ப்போரை உறைய வைத்துள்ளது.

மேலும் அந்தப் பெண் அடுப்பில் பாத்திரத்தை வைத்துவிட்டு தன் செல்லப் பிராணியான பூனையுடன் பேசிக்கொண்டிருந்த தருணத்தில், ஜன்னல் வழியாகத் தவழ்ந்து வந்த அந்த பாம்பு திடீரென கொதித்துக் கொண்டிருந்த பாத்திரத்திற்குள் விழுந்தது. இந்தத் திடுக்கிடும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி  கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

பாம்பு பாத்திரத்தில் விழுந்ததைக் கண்டு அந்தப் பெண் நிலைகுலைந்து அலறினாலும், அடுத்த சில வினாடிகளிலேயே மிகுந்த துணிச்சலுடன் செயல்பட்டார். பாம்பு வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக, உடனடியாக அந்தப் பாத்திரத்தின் மீது ஒரு மூடியை வைத்து அழுத்தமாக மூடினார்.

இதனால் சற்றும் எதிர்பாராத இந்த ஆபத்தான சூழலில் அந்தப் பெண் காட்டிய சமயோசித புத்தியும், பதற்றப்படாமல் அவர் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கையும் இணையவாசிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் கூட நிதானத்தை இழக்காமல் செயல்பட்ட அந்தப் பெண்ணின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.