அதிமுகவில் இணைந்திருக்கும் நடிகை கௌதமி, வரும் சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது விருப்பமனுவைத் தாக்கல் செய்துள்ள அவர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனக்குப் போட்டியிட வாய்ப்பளிப்பார் என்ற முழு நம்பிக்கையுடன் இருப்பதாகச் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் பேசிய கௌதமி, ராஜபாளையம் தொகுதியின் மீதும் அங்கிருக்கும் மக்கள் மீதும் தனக்கு மிகுந்த ஈடுபாடு இருப்பதாகத் தெரிவித்தார். இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், கட்சியின் வெற்றிக்காகத் தீவிரமாக உழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.
