விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டுத் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தைக் குறிப்பிட்டுத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடைய விரும்புவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த ஆறுதலையும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாக விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.