எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) கடுமையான சவால் காத்திருக்கிறது. அந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) அதிகாரப்பூர்வ வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளார்.
தனது கட்சியின் முன்னாள் நிர்வாகியும், சுயேச்சை வேட்பாளருமான பிரேம்குமாருக்குத் தவெக-வின் முழு ஆதரவை விஜய் அறிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசியுள்ள வேட்பாளர் பிரேம்குமார், “எடப்பாடியில் இபிஎஸ் கண்டிப்பாகத் தோற்கடிக்கப்படுவார். விஜய்யின் ஆதரவு எனக்குக் கிடைத்திருப்பது தேர்தல் களத்தில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘டெலிவிஷன்’ சின்னத்தில் போட்டியிடும் எனக்குக் கிடைக்கும் வெற்றி, தவெக-வின் சின்னத்தை முடக்க நினைத்தவர்களுக்கு ஒரு தக்க பாடமாக அமையும்” என மிக ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இந்த ‘மாஸ்டர் பிளான்’ அதிமுக கோட்டையான எடப்பாடியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இபிஎஸ்-க்கும் பிரேம்குமாருக்கும் இடையிலான இந்தப் போட்டி இப்போது தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
