திருச்சி கிழக்குத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிரமாக ரோடு ஷோவில் ஈடுபட்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் வீசிய ஜூஸ் பாட்டில் திடீரென அவரது தலையில் பட்டதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.

வழக்கமாக விஜய் பரப்புரைக்குச் செல்லும் இடங்களில் தொண்டர்கள் அன்பின் மிகுதியால் கட்சித் துண்டு, பழங்கள் மற்றும் கூலிங் கிளாஸ் போன்றவற்றை வழங்குவதும், அதனை விஜய் புன்னகையோடு பெற்றுக்கொள்வதும் வாடிக்கை.

ஆனால், திருச்சியில் விஜய் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் ஜூஸ் பாட்டிலை வீசியுள்ளார். அது நேராக விஜய்யின் தலையில் பட்டதால் சிறிது நேரம் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இது தற்செயலாகத் தூக்கிப் போடப்பட்டதா அல்லது திட்டமிட்ட சதி செயலா என்ற கோணத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்தத் திடீர் சம்பவத்தால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்ட போதிலும், விஜய் நிலைமையைச் சமாளித்துத் தனது பரப்புரையைத் தொடர்ந்தார்.