விருச்சிக ராசி அன்பர்களே, 

இன்று தனி திறமையால் வெற்றி பெறுவீர்கள். மனதில் ஞானம் பிறந்து சிந்தித்து செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிவிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பண வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். நண்பர்களுடன் விருந்து விழாக்களில் பங்கு பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் கண்டிப்பாக மாறும். எந்த ஒரு செயலையும் பெண்கள் நேர்த்தியுடன்  செய்து முடிப்பீர்கள்.  கூடுதல் கவனமாக  இருப்பது நல்லது. கோவில் குளங்களுக்கு சென்று வருவீர்கள்.

பெண்கள் இன்று மனதை அமைதியாக  வைத்துக் கொள்வீர்கள். காரியத்தடை தாமதம் ஏற்பட்டாலும் சரியாகிவிடும்.  தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். சிந்தித்து செயல்படுங்கள். குடும்பத்தாரிடம் கோபித்துக் கொள்ள வேண்டாம். வீடு மனை வாங்க போட்ட திட்டம் வெற்றி பெறும்.

இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். பொறுப்புடன் செயல்படுவீர்கள். லட்சிய நோக்குடன் கல்வியை அமைத்துக் கொள்வீர்கள்.போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.    இன்று  சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  : தெற்கு

அதிர்ஷ்ட எண்  :  ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  சிவப்பு மற்றும் பச்சை நிறம்