விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று நேர்மையான முறையில் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிந்தனைகளை ஒருநிலைப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பிறரிடம் நல்ல பெயர் எடுக்கும் சூழல் உள்ளது. தொழிலில் சராசரி உற்பத்தி விற்பனை இருக்கும். இன்று தொழில் போட்டிகள் கண்டிப்பாக நீங்கும்.

உத்தியோகம் நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சம்பளம் உயர்வு கண்டிப்பாக இருக்கும். எண்ணற்ற மாற்றங்கள் ஏற்றங்கள் இருக்கும். அனைவரின் ஆதரவும் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பெண்கள் இன்று சரியான பாதையை அமைத்துக் கொள்வீர்கள்.

வாழ்க்கை தரம் உயரக்கூடும். நட்பால் நலம் பெறுவீர்கள். இன்று மாணவர்களுக்கு மகத்துவமான நாளாக இருக்கக்கூடும். மொழி சம்பந்தப்பட்ட பாடங்களில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். புதிய சிந்தனைகளை மேம்படுத்தி வெற்றி பெறுவீர்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்