துலாம் ராசி அன்பர்களே, 

இன்று உயர்வான எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள் குடும்ப விஷயங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம். பயணத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். கடின உழைப்பால் தொழில் வியாபாரம் வளர்ச்சி அடையும். குடும்ப உறவுகள் பலப்படும். குழப்பங்கள் படிப்படியாக நீங்கும்.

மன அமைதி ஏற்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி காணப்படும். சொத்துக்கள் வாங்க போட்ட திட்டம் வெற்றியைக் கொடுக்கும். எதிர்ப்புகள் விலகும். நன்மைகள் தேடி வரும். பெண்களுக்கு இந்த நாள் முன்னேற்றமான நாளாக இருக்கும். முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள்.

பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுய முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். இன்று மாணவர்கள் சுலபமாக கல்வியில் ஜெயிக்க முடியும். எந்த செயலிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஒன்பது

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்