கன்னி ராசி அன்பர்களே,

இன்று சட்டென வார்த்தைகளை விட்டு விட வேண்டாம். கோபத்தை விட்டு விடுங்கள். சிலர் நட்பு பாராட்டுவார்கள். சிலர் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். தொழில் வியாபாரம் பெருக கூடுதலாக பணிபுரிவீர்கள். பணவரவில் முன்னேற்றம் ஏற்படும். இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

வீண் பழி நீங்கிவிடும். கவலை வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும். நேர்மையாக நடந்து கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவது நல்லது. இன்று மாணவர்கள் மொழி சம்பந்தப்பட்ட பாடங்களை நன்றாக படியுங்கள்.

வெளிவட்டார தொடர்பு விரிவு படுத்திக் கொள்ள முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்