விருச்சிக ராசி அன்பர்களே…

இன்று நேரம் காலம் பார்க்காமல் கண்டிப்பாக உழைப்பீர்கள். தொட்டது துளிர்விடும் என்று சொல்லலாம். காரியங்கள் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். தொகை வருவதில் எதிர்பார்த்தபடி வந்து சேரும். கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். இன்று காரியங்களில் திடீர் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். திட்டமிட்டு காரியங்கள் செய்வதன் மூலம் சாதகமான நல்ல பலனை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

விருச்சிகம் ராசி அன்பர்கள் சக மனிதர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். திடீர் தடை தாமதம் ஏற்பட்டாலும் கண்டிப்பாக உங்களால் சாதிக்க முடியும். இன்று மற்றவர்கள் விஷயத்தில் மட்டும் தெளிவாக இருக்க பாருங்கள். அனுசரித்து செல்வது நல்லது பெரியவர்கள் ஆசிரியர்கள் அரவணைப்பு கண்டிப்பாக இருக்கும் பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் .நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். மாணவர்கள் எதிர்த்து செயல்பட வேண்டாம். பணிவுடன் நடந்து கொள்ளுங்கள்.

நன்கு படிப்பது ஒன்றே குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் காலையில் தினமும் சுறுசுறுப்புடன் எழுந்திருக்க வேண்டும். அது உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். இன்று விருச்சிக ராசி நேயர்களுக்கு நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்ட பின்னர் சரியாகும். சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். சுப செலவினங்கள் கொஞ்சம் அதிகமாகும். பெண்கள் இன்று எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக பார்த்து செய்வீர்கள். குழப்பத்துடன் எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டாம். பெண்கள் முடிந்தவரை அனைத்தையும் யோசித்து செய்யுங்கள். எதிலும் அவசரப்பட வேண்டாம்.

இன்று பெண்கள்  மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மனதிற்கு விருப்பமானதை செய்வீர்கள். கொஞ்சம் மன கசப்பு ஏற்படலாம். அதில் மட்டும் கவனமாக இருக்கவும் .முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறம்.