தனுசு ராசி அன்பர்களே….

இன்று கொஞ்சம் நீங்கள் ரொம்ப ரொம்ப பார்த்து பக்குவமாக வழிபட வேண்டும். அதாவது ஆன்மீகத்தில்உங்களை  ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு சிறப்பானதாக அமையும். சந்திராஷ்டம முடியும் வரை பொறுமையாகவும் பொறுப்பாகவும் நடந்து கொள்ளுங்கள். நம்பிக்கையுடன் செயல்படுங்கள் கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். இன்று முன் பின் தெரியாதவர்களிடம் கவனமாக பேசுங்கள். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் கண்டிப்பாக விலகிச் செல்லும். சொத்துக்களால் உங்களுக்கு லாபம் ஏற்படும். இன்று பொருளாதார உயர்வு ஏற்படும் சூழல் உள்ளது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக இன்று காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவி கண்டிப்பாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகிச் செல்லும். அரசு காரியங்கள் சாதகமாக இருக்கும். பெண்கள் எந்த செயல் செய்யும்போதும் நல்லது கெட்டது ஆராய்ந்து செய்யுங்கள். தடபுடலாக இறங்கி எதிலும் ஈடுபட வேண்டாம். சந்திராஷ்டம முடியும் வரை பொறுமை காக்க வேண்டும். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது பொறுமை வேண்டும்.

எதையும் ஒரு முறை இருமுறை   முயற்சி செய்து வெற்றி பெறலாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உதவி கேட்பவர்களுக்கு கூட இப்போதைக்கு பெரிய உதவிகள் எதுவும் செய்ய வேண்டாம் இந்த காலகட்டங்களில் நல்லது செய்யப் போனால் கூட சில நேரங்களில் அது தவறாக முடிந்து விடக்கூடும். ஆகவே சந்திராஷ்டம முடியும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இன்று மாணவர்கள் எதையும் யோசித்து செய்ய வேண்டும்.

குழப்பம் அடைய வேண்டாம். நன்றாக படியுங்கள். சக மாணவர்களை அனுசரித்து செல்லுங்கள். ஆசிரியர்களிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். பெரியவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு செயல்படுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதே போன்று இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த காரியத்திலும் ஈடுபடுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் மற்றும் நீல நிறம்