மகர ராசி அன்பர்களே….

இன்று கண்டிப்பாக நீங்கள் சிந்தித்து செயல்படக்கூடிய நாளாக இருக்கும். சிரமங்களை தவிர்ப்பதற்கு சிந்தித்து செயலாற்றுங்கள். அதன் மூலம் மட்டும் தான் வெற்றி கிடைக்கும். குடும்ப சுமை கூடும் வரவை விட செலவு அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. விரும்பிய பொருட்களை வாங்க விரயம் செய்வீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் இன்று தீரும். கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை தேவை.

இன்று அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக பேசுங்கள் நல்ல மதிப்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மன நிம்மதி ஏற்படும். உறவினர்கள் வருகை உண்டு. தாய் வழி உறவுகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறும். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். எதிலும் ஆரோக்கியமாக முடிவெடுங்கள். மாலை நேரம் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள் உடலையும் மனதையும் வலுவாக வைத்துக் கொள்ளுங்கள். யாரையும் புண்படுத்தும் படி பேச வேண்டாம். கடினமாக உழைத்து முன்னேறி செல்ல வேண்டி இருக்கும்.

மகர ராசி அன்பர்களின் வாழ்வில் முதல் பாதி கொஞ்சம் கடினமாகவும் இரண்டாம் பாதி செல்வபோக வாழ்க்கையாகவும் இருக்கும் எனவே முயற்சி செய்து கொண்டே இருங்கள். ஒரு நேரம் வெற்றி பெறுவீர்கள். எப்போதும் கவலை கொள்ள வேண்டாம் மற்றவர்களுக்கு உதவும் போது கவனம் வேண்டும். இருந்தால் மட்டும் உதவுங்கள் கடன் வாங்கி உதவி செய்ய வேண்டாம். பெண்கள் எதையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். முன் கோபத்தை தவிருங்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அடுத்தவர்களிடம் கவனமாக பேசுங்கள்.

இன்று மாணவர்கள் எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். இருந்தாலும் கல்வி பற்றிய பயம் அவ்வப்போது வந்து செல்லும். கல்வியில் முன்னேறும் என்னும் இருக்கும். குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும், கடினமான சூழலில் இருந்து மீள வேண்டும் அதற்கு கல்வி உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். நன்றாக படியுங்கள். படித்த பாடங்களை எழுதி பாருங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதே போன்று இன்றைய தினம் சித்தர்களின் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்