கும்ப ராசி அன்பர்களே….

இன்று நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ரொம்ப லாவகமாக நீங்கள் கையாள வேண்டி இருக்கும். திறமைகள் அடிப்படையில் தான் நீங்கள் முன்னேற்றத்தை காண முடியும். ஆகவே புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு திறமையால் முன்னேறி செல்லுங்கள். இன்று முயற்சிகள் மூலம் முன்னேற்றம் இருக்கும். புது விஷயங்களை அற்புதமாக கற்றுக் கொள்ள முடியும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். முற்போக்கான சிந்தனை வெளிப்படும். கோரிக்கைகள் ஓரளவு நிறைவேறும். நியாயமான எண்ணங்கள் தோன்றும்.

இந்த நாள் செயல் வெற்றிக்கு  இறைவழிபாட்டில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சூழ்நிலைக்கேற்ப எந்த ஒரு சூழலையும் மாற்றிக்கொள்ள வேண்டும். எந்த முயற்சியிலும் முன்னேற்றம் இருக்கும் பயம் வேண்டாம். திருமண கனவுகள் நனவாகும் திருமண ஏற்பாடுகளை செய்யலாம் நல்ல வரன்கள் வரக்கூடும். பண தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்.

இன்று  புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். பணவரவு திருப்தியை கொடுக்கும் பயம் வேண்டாம். இன்று உங்களது செயலுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். பேச்சு திறமை கண்டிப்பாக கை கொடுக்கும். எதிர்பார்த்த உதவி நன்மையை கொடுக்கும் இன்று .பொருட்களை கையாளும் போது கவனமாக கையாளுங்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் இருக்கும் .நம்பிக்கையுடன் எந்த காரியத்திலும் ஈடுபடுங்கள். ஆலய வழிபாட்டினை மேற்கொள்ளுங்கள் .எதிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம் சிந்தித்து செயலாற்றுவது நல்லது.

இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். காரியங்களில் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றமான சூழல் இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்றைய தினம் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். நல்ல முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்டமான திசை :  வடக்கு

அதிஷ்ட எண் :  6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்  :  சிவப்பு மற்றும் பிங்க் நிறம்.