தமிழகத்தில் பொதுவாக முக்கிய திருவிழாக்கள் ,பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில்  மதுரை, புதுக்கோட்டையில் மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மே 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் மதுரை, புதுக்கோட்டையில் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுபான விடுதிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.