மீனம் ராசி அன்பர்களே….

இன்று புண்முறுவலுடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு செயலையும் கனகச்சிதமாக எதிர்கொள்வீர்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் இன்று அதிகரிக்கும். காரிய வெற்றிக்கு இறை வழிபாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியும். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். மாற்று இனத்தவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். சங்கிலி தொடர்போல் வந்த கடன் சுமை கண்டிப்பாக குறையும் உடல்நலம் சீராகி உற்சாகம் ஏற்படும்.

இன்று தொழில் வியாபாரம் மந்தமாக தான் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரவு தாமதப்பட்டாலும் கண்டிப்பாக கையில் வந்து சேரும் தொழில் வியாபாரம் பற்றி கவலை ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளையும் விரைவாக செய்து முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். உங்கள் பேச்சுக்கு இன்று எல்லோரும் மதிப்பு கொடுப்பார்கள்.

இன்று பேச்சு திறமையால்  வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு வெளிப்படுத்துவீர்கள். முன்கோபம் காட்ட வேண்டாம். நல்ல நண்பர்கள் சேர்க்கை ஏற்படும். சக ஊழியர்களிடம் கவனமாக இருங்கள். அனைவரையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். யாரையும் எந்த காரணத்திற்கு கொண்டும் அதிகாரம் செய்ய வேண்டாம். இன்று பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு மேற்கொள்ளலாம்.

இன்று பெண்களுக்கு வர வேண்டிய பணம் வரும் முன்னோர் சொத்துக்கள் கையில் கிடைக்கக்கூடும். பெண்கள் இந்த நாளை இனிய நாளாக கொண்டாடலாம் .முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். இன்று மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் முன்னேற்றமான வாழ்க்கை அமையும் எதையும் திறமையால் வெற்றி கொள்வீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள்.

இன்று  முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் .அப்படியே இன்று சித்தர்களின் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். நல்ல முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்  : 2, 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்