விருச்சிகம் ராசி அன்பர்களே, 

இன்று முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். ஆதரவு கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

திட்டம் தீட்டி பணிகளை மேற்கொள்ள முடியும். பொறுமையாக இருப்பதன் மூலம் முன்னேற்றத்தை அடையலாம். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பெண்கள் இல்லத்தை அலங்கரிப்பீர்கள். மனம் சந்தோசமாக காணப்படும்.

திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் குழப்பம் அடைவீர்கள். என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று சிந்திப்பீர்கள். கல்வியில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறு வயது முதலே அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3, 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்